Skip to main content

Posts

  6-வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப்போட்டி சென்னையில் நடைபெறுகிறது. தென் இந்தியாவில் முதல் முறையாக இந்தப்போட்டி தமிழகத்தில் நடத்தப்படுகிறது. இந்நில https://www.maalaimalar.com/news/state/prime-minister-modi-inaugurated-the-khelo-india-youth-sports-competition-699082
Recent posts

பிரதமரை வரவேற்ற தமிழக ஆளுநர்

ஆளுநர் ஆர்.என். ரவி தமிழ்நாட்டுக்கு இன்று வருகை தந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி அவர்களை சென்னை நேரு விளையாட்டரங்கில் வரவேற்றார்.

தரிசனம் செய்ய அதிக பக்தர்கள் கூடுவார்கள் என்பதால் அயோத்தியில் ராமர் சிலை ஊர்வலம் ரத்து

அயோத்தியில் ராமர் கோவில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ளது. ராமர் கோவில் கும்பாபிஷேகம் வருகிற 22-ந்தேதி நடைபெற இருக்கிறது. 16-ந்தேதி முதல் அதற்கான வேலைகள்  தொடங்க இருக்கிறது. கோவில் கருவறையில் குழந்தை வடிவிலான ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட இருக்கிறது. இதற்கு முன்னதாக 17-ந்தேதி கருவறையில் பிரதிஷ்டை செய்யப்பட இருக்கும் குழந்தை வடிவிலான ராமர் சிலையை அயோத்தி நகரில் ஊர்வலமாக எடுத்துச் செல்ல முடிவு  செய்யப்பட்டது. கருவறையில் நிறுவப்படும் சிலையை ஊர்வலமாக எடுத்துச் செல்லும்போது அதிக அளவில் பக்தர்கள் தரிசனம் செய்ய கூடுவார்கள். குறிப்பாக அயோத்தி  நகருக்கு வெளியே உள்ள பக்தர்கள், பொது மக்களும் அதிக அளவில் தரிசனம் செய்வதற்காக கூடுவதற்கு வாய்ப்புள்ளது. இதனால் பாதுகாப்பு பிரச்சனை ஏற்படும் என  அயோத்தி பாதுகாப்பு அதிகாரிகள் கவலை தெரிவித்தனர்.  இதனால் ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை, ராமர் சிலை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுவது  ரத்து செய்யப்படுகிறது என அறிவித்துள்ளது. இதற்குப் பதிலாக கோவிலுக்குள் வைக்கப்படும் சிலை ஊர்வலாக எடுத்துச் செல்லப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கு ஹைதராபாத் - தமிழகத்திற்கு திருச்சி தலைநகராக வேண்டும் ; அமைச்சர் துரைமுருகன் பேச்சு

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நுாற்றாண்டு விழாவையொட்டி, திருச்சியில் 100 அடி உயர கம்பத்தில், தி.மு.க., கொடியேற்று விழா நடந்தது. நிகழ்ச்சியில் பங்கேற்ற நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது: ஆயிரம் கொடிகள் இருந்தாலும், தி.மு.க., கொடியை போல் கம்பீரம் வேறு எந்தக் கொடிக்கும் இருக்காது. கருணாநிதியின் ரத்ததில் உருவானது இந்தக் கொடி. இந்த நிகழ்ச்சியில், நான் பார்த்ததும், பார்க்காததுமான வீடியோ காட்சிகளை ஒளிபரப்பினார்கள். இது முன்னதாகவே தெரிந்திருந்தால், என் ஊர்காரர்களை எல்லாம் அழைத்து வந்திருப்பேன்.  எதையும் சாதிக்கும் திறமை உள்ள அமைச்சர் மகேஷுக்கு, எதுவும் தெரியாதது போல் நடிக்கும் திறமையும் இருக்கிறது. பள்ளிக் கல்வித்துறையில் நச்சுப்பிடித்த விவகாரம் அதிகம் இருக்கும். சட்டசபையில், மானியக் கோரிக்கையின் போது, கையில் எந்த பேப்பரும் இல்லாமல், மள மளவென பேசினார். இதற்கு முன், நான் தான், சட்டசபையில் அப்படி பேசுவேன். எனக்குப் பின், அந்த ஆற்றலை பார்த்து, தி.மு.க.,வை வழிநடத்தும் தலைவன் ஒருவன் கிடைத்ததாக பெருமைப் பட்டேன். மூன்று தலைமுறையாக அரசியலில் வந்த அந்த மண் வாசனை அப்படி. கருணாநித

லால்குடி அருகே மழை நேரத்தில் செல்போனில் பாட்டு கேட்டு கொண்டிருந்த வாலிபர் மின்னல் தாக்கி பலி

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே பல்லபுரம் மாமரத்து கொள்ளை பகுதியில் வசிக்கும் ஜெயபால் மகன் ஜெயக்குமார் (26). லால்குடி அருகே குமுளூர் வேளாண்மை பொறியியல் கல்லூரியில் பஸ் டிரைவராக வேலை செய்து வந்தார். பல்லபுரத்தில் நேற்று மாலை இடியுடன் கனமழை பெய்தது. அப்போது, ஜெயக்குமார் வீட்டில் செல்போனில் பாட்டுக் கேட்டுக் கொண்டிருந்தார். திடீரென வீட்டில் மின்னல் தாக்கியது. இதில் ஜெயக்குமார் மயங்கி விழுந்தார். உடனே அவரை மீட்டு லால்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் அவர் ஏற்கனவே இறந்தது தெரியவந்தது.  இதுக்குறித்து தகவலறிந்த லால்குடி இன்ஸ்பெக்டர் உதயகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

கூலி வேலை செய்து வாங்கிய பைக் மகன் உயிரை வாங்கியது ; மணிகண்டம் அருகே பரிதாபம்

திருச்சி- மதுரை தேசிய நெடுஞ்சாலை மணிகண்டம் அருகே நாகமங்கலம் குடிசை மாற்று வாரிய வீட்டில் வசிப்பவர் சங்கர் கூலித் தொழிலாளியாக உள்ளார். இவரது மகன் சிவா குண்டூர் அருகே உள்ள தனியார் (எம்ஐஇடி) கல்லூரியில் படித்து வந்தார். மகனின் வற்புறுத்தல் காரணமாக, கூலி வேலை செய்யும் பெற்றோர், தனது மகனுக்கு புதிதாக அதிக விலையுள்ள கேடிஎம் பைக் வாங்கி கொடுத்துள்ளனர். அதிவேகத்தில் செல்லக்கூடிய இந்த வகை பைக்குகள், நமது ஊர் சாலைகளில் ஓட்டுவது மிகவும் ஆபத்தான விஷயம்.ஆனாலும் மகனின் மன திருப்திக்காக பைக்கை வாங்கிக் கொடுத்துவிட்டு, அடிவயிற்றில் நெருப்பை கட்டியதை போல இருந்துள்ளனர். இந்நிலையில், சிவா இன்று காலை, வீட்டில் இருந்து கல்லூரிக்கு பைக்கில் கிளம்பினார். மதுரையில் இருந்து திருச்சி நோக்கி செல்லும் சாலையில் சிவா சென்றபோது, முதியவர் ஒருவர் குறுக்கே வந்ததாக கூறப்படுகிறது.அவர் மீது மோதாமல் இருக்க, தனது கேடிஎம் பைக்கை அம்பேத்கர் நகர் வளைவு சாலையில் உள்ள தடுப்புக் கட்டையில் மோதியுள்ளார்.அதிவேகமாக வந்து மோதியதால் தூக்கி வீசப்பட்ட சிவா, சாலையின் மறுபக்கம் வந்த, காய்கறி ஏற்றி வந்த மினி லோடு ஆட்டோவின் கண்ணாடியை உடைத

சிறுகனூர் அருகே தனியார் செல்போன் டவர் பேட்டரியை திருட முயன்றவர்கள் 24 மணி நேரத்தில் கைது

திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே பி.கே.அகரம் கிராமத்தில் உள்ள தனியார் செல்போன் டவரில் இருந்த பேட்டரியை திருடுவதற்கு சரக்கு வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் வாகனத்தை விட்டு விட்டு தப்பிச் சென்றனர். வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் 24 மணி நேரத்தில்  குற்றவாளிகளை 4 பேரை போலீசார் கைது செய்தனர். பி. கே. அகரம் கிராமத்தில் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான இரண்டு செல்போன் டவர் அமைந்துள்ளது. இந்த 2 டவரிலும் 6 பேட்டரிகள் உள்ளது. ஒரு பேட்டரியின் மதிப்பு ரூ. 2.5 லட்சம் என கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று அதிகாலையில் செல்போன் டவரில் உள்ள பேட்டரிகளை திருடுவதற்க்காக சரக்கு வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் பேட்டரிகளை திருட முயன்றனர். இதில் 3 பேட்டரிகளை கழற்றி வெளியே எடுத்து வந்ததாக கூறப்படுகிறது. அப்போது அதிலிருந்த  ஒலிக்கும் அபாயமணி சத்தம் தனியார் செல்போன் டவர் நிர்வாகிகளுக்கு சென்றுள்ளது. இதையடுத்து செல்போன் டவர் நிர்வாகிகள் சிறுகனூர்  போலீசாருக்கு தகவல் கொடுத்துவிட்டு சம்பவ இடத்திற்க்கு சென்றனர். மேலும் திருச்சி சென்னை தேசிய நெடுச்சாலையில்  ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரும் சம்பவ